
BactFast சோதனையின் அறிமுகம்
Credence Genomics நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்த நவீன சோதனை முறை மூலம், இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து பாக்டீரியாக்களின் முழுத்தொகையினையும் ஒரு சோதனையின் மூலம் கண்டறிய முடியும். இதன் மூலமாக பாக்டீரியா வளர்ப்பு முறைக்கு உகந்ததல்லாத பாக்டீரியா இனங்களையும் கண்டறிய முடியும். சாதாரணமாக 7 நாட்கள் எடுக்கும் பாக்டீரியா கண்டறிதல் சோதனையானது, தற்போது 48 மணி நேரத்தில் பூர்த்தி செய்து கொள்ள முடிவதுடன் உங்களை ஆக்கிரமிக்கும் பாக்டீரியா இனங்களை துரிதமாக கண்டறிந்துகொள்ளவும் முடியம்.BactFast முறையானது பாரம்பரியநுண்ணுயிர் மற்றும் உயிர்வேதியியல் சோதனையிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. மிகவும் தெளிவான, துல்லியமான மற்றும் மிகவும் நம்பகமான தரவுகளை மிக குறைந்த நேரத்தில் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாது இச்சோதனைக்கு மிக குறைந்த அளவிலான சோதனை மாதிரி மட்டுமே பெற்றுக்கொள்ளப்படுகிறது.
உடல்நலம் மற்றும் தொழில்துறைக்கான BactFast சோதனை
BactFast ஆனது அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளின் உயிர் காக்கும் ஒரு சோதனை முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முறை தொற்றுநோய்களுக்கான காரணிகளை கண்டறிவதற்கும் வெவ்வேறு தொழில்முறைகளில் இடம்பெறும் மாசுக்களை கண்டறிவதற்கும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
உடல்நலக்காப்பு
- செயற்கை காற்று மூலம் உருவாகும் நியூமோனியா நிலை
Ventilator Associated Pneumonia (VAP) - வேறுபட்ட மருத்துவ தேவைகளுக்காக மைய குருதி நாளங்களில் பொருத்தப்படும் வடிகுழாய் / சிறு குழாய்களில் ஏற்படும் தொற்றுக்கள் Central Line Associated Bloodstream Infections (CLABSI)
- சிறுநீர் குழாய்களில் பொருத்தப்படும் வடிகுழாய் / சிறு குழாய்கள் மூலமாக ஏற்படும் தொற்றுக்கள் Catheter associated Urinary Tract Infections (UTI)
- நீரிழிவு புண்கள் Diabetic Ulcers
- நோய்க்காரணி அறியப்படாத ஒன்றுக்கு மேற்பட்ட கலப்பு தொற்றுநோய்கள். Mixed Infections with unknown etiology
தொழில்துறை
- உணவு மற்றும் பானங்கள்
- விவசாய தயாரிப்புக்கள்
- பால் உற்பத்திகள்
- மருந்து பொருட்கள்
- ஒப்பனை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு உற்பத்திகள்
- நீர் / கழிவுநீர் சுத்திகரிப்பு
- மண்ணின் தோற்றவடிவ ஆய்வுகள்
- விமான எரிபொருள் சோதனை
BactFast முறை மூலமாக மனித வர்க்கத்துடன் தொடர்புடைய நுண்ணங்கிகளை அறிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் மனித சுகாதாரத்தில் நுண்ணங்கிகளின் பங்கு பற்றியும், மேலும் நுண்ணங்கிகளின் வாழ்க்கை பரிணாமம், நோய் பற்றிய விளக்கம், நோய் எதிர்ப்பு சக்தி, போன்ற உள்ளார்ந்த விடயங்களை ஆழமாக தெளிவுபடுத்துவதற்கு உதவியாகவும் உள்ளது.
BactFast முறையில், ஆய்விகூடத்தில் மேற்கொள்ளப்படும் நுண்ணங்கி வளர்ப்பு முறைகள் முழுமையாக அகற்றப்படுவதால் துரித முறையில் தொற்று நோய்களை கண்டறிவதற்கு இம்முறை உகந்ததாக உள்ளது.
இந்த அணுகுமுறை வைத்தியர்களை, நோய்த்தொற்றின் உக்கிரநிலை பற்றி அறிந்து குறிப்பிட்ட மருத்துவமுறைகளை கையாள்வதற்கு வழிசெய்கிறது. இதன்மூலமாக நோயாளர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் அளவுக்கு அதிகமான மருந்துகள் குறைக்கப்படுவதோடு தேவையற்ற மருந்து பாவனையால் ஏற்படும் பாதகமான விளைவுகள் இல்லாதொழிக்கப்படுகிறது.
முக்கிய தரவுகள்
- ஒரு தடவையில், கண்டறியப்பட்ட அனைத்து பாக்டீரியாக்களையும் இனக்காண முடியும்.
- ஆய்வுகூட நுண்ணங்கி வளர்ப்பு முறைகள் எவையும் அற்றது.
- 48 மணிநேரத்தில் சோதனையை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
- மேம்படுத்தப்பட்ட ஆய்வுமுறைகளை கொண்டது.
- 99% உணர்திறன் மிக்கது.
உங்களுக்கு தெரியுமா?
எமது உடல் பத்தாயிரம் திரில்லியனுக்கு மேற்பட்ட நுண்ணுயிர் செல்களை கொண்டுள்ளது. இது எமது உடலில் உள்ள சாதாரண செல்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். அத்தோடு பெருந்தொகையான நுண்ணுயிர்களை நாம் தினமும் உணவின் மூலமும் சுவாசத்தின் மூலமும் உள்ளெடுக்கின்றோம். இதில் பல நுண்ணுயிர்கள் அதிவீரியமான நோயுண்டாக்கும் நுண்ணுயிர்களாக அமைவதோடு உயிருக்கு ஆபத்தான நோய்களை உண்டாக்கும் காரணிகளாக உள்ளன.
Why choose BactFast?
வசதிகள் | பாரம்பரிய முற | BactFast |
---|---|---|
சோதனைக்காக நேரம் | 7-10 நாட்கள் | 48 மணித்தியாலம் |
துல்லிய நிலை | ~ 80 % | 99.0 % |
பரிசோதனையின் துல்லியம் | ிபுணர்கள் தேவை;
தேவையற்ற தவறுகள் கொண்டது |
நிபுணர்கள் தேவையற்றது;
உயர் உணர்திறன் உடையது; நம்பத்தகுந்தது |
செயல் வீதம | வரையறுக்கப்பட்டத | அதிகரிக்கப்பட்டத |
உணர்திறன் | வேறுபட்டத | உயர்வானத |
மாசுப்படக்கூடிய ஆபத்த | மற்றைய
நுண்ணங்கிகளினால் தடுக்கப்படும |
நுண்ணங்கி
வளர்ப்பு முறை அற்றது |
ஒரு சோதனையிலுள்ள
உயிரினங்கள் |
ஒரு சோதனையில்
ஒரு உயிரினம் மட்டும்; நுண்ணங்கிகள் விடுபடும் வாய்ப்புக்கள் அதிகம் |
கண்டறியப்பட்ட
அனைத்து இனங்களும் இனங்காணப்படும |
கண்டறியப்படும் | நோய்காவிகளை
கண்டறிவத |
இதுவரை கண்டறியப்பட்ட |
சிறந்த சோதனை முறைக்கான முக்கியத்துவம்
கடந்த சில தசாப்தங்களாக நுண்ணங்கிகளை இனங்காணும் சோதனையானது, ஆய்வுகூடத்தில் நுண்ணங்கிகளை வளர்ப்பதால் ஏற்படும் இன்னல்கள் காரணமாக பெரும் இடர்களை எதிர் நோக்கி காணப்பட்டது. சில நுண்ணங்கிகளில் காணப்படும் அசாதாரண உயிர்வேதியியல் விளைவுகளின் காரணமாக, பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி நுண்ணங்கிகளை இணைக்க்காணும் முறை செயற்த்திறன் அற்றதாகவும் நேரத்தை வீணடிப்பதாகவும் காணப்பட்டது. பெரும்பாலும் பாரம்பரிய சோதனைகளின் உணர்திறனை கணக்கிடும் போது 20%ஆன தரவுகள் தவறானவையாக இருந்தன. ஆனால் DNA மூலம் நுண்ணங்கிகளை கண்டறியும் முறையினால் ஆய்வுகூட நுண்ணங்கி வளர்ப்பு முறைகள் நிறுத்தப்பட்டதோடு நுண்ணங்கி கண்டறிதலும் உணர்திறன் மிக்கதாக உள்ளது.
BactFast analysis types offered
கண்டறிதல்
BactFast சோதனையானது இதுவரை இனங்காணப்பட்ட அனைத்து பாக்டீரியா இனங்களையும் ஒரு தடவையில் மணி நேரத்தில் இனங்காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு பாக்டீரியாக்களின் பரிணாம மரபுவழி கட்டமைப்புக்களை இனங்கண்டு பகுப்பாய்வு தரவுகளை மேம்படுத்த உதவுகிறது.
சோதனை தரம்
இம்முறை இனங்காணப்பட்ட பாக்டீரியாக்களின் வேறுபட்ட இனங்களை கண்டறிவதால் சிறந்த ஆய்விற்கு வேண்டிய தரவுகளை வழங்குகின்றது. எப்பொழுதும் பரமப்பரிய முறையின் எல்லைகளை தாண்டிய நன்மைகளை வழங்குகிறது.
ஒப்பீட்டு பகுப்பாய்வு
குறிப்பிட்ட தொற்றுக்கான நுணங்கியை தெளிவாக இனங்காண்பதால் சிறந்த தெரிவுசெய்யப்பட்ட மருத்துவ முறைகளை கையாளமுடியும். இதனால் மருந்துகளுக்கான பக்கவிளைவுகள் குறைக்கப்படுகின்றது.