
FungiFast
Credence Genomics நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட FungiFast எனும் சோதனை பங்கசுக்களால் மனிதர்களுக்கு ஏற்படும் தொற்றுநோய் பற்றி அறிவதற்கும், மருத்துவத்துறை மற்றும் தொழில்துறைகளில் பங்கசுக்களால் ஏற்படும் மாசுக்கள் பற்றி அறிவதற்கும் வடிவமைக்கப்பட்டதாகும். இந்த சோதனை நோயாளர்களை ஆக்கிரமிக்கும் பங்கசு இனங்களை கண்டறிவதோடு இந்த முறையை 48 மணி நேரத்தில் பூர்த்தி செய்வதற்கு மிக குறைந்த அளவிலான சோதனை மாதிரி தேவைப்படுகிறது.
அநேகமான தொழில்துறைகளில் சோதனையின் பங்கு
உடல்நலக்காப்பு
- உடல் மேற்பரப்புக்களில், தோலுக்கு கீழுள்ள படைகளில் அதிகரித்து பரவும் பங்கசு தொற்றுக்கள் வீரியம் மிக்க பங்கசு தொற்றானது நோய் எதிர்ப்புத்திறன் அற்றவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை
- செய்த நோயாளிகள், செயற்கை முறையில் உணவு ஊட்டப்படும் நோயாளிகள் மற்றும் மாத்திரை பாவனையின் கீழ் வைத்திருக்கப்படும் நோயாளிகளில் அதிகம் அவதானிக்கப்படுகிறது.
தொழில்துறை
உணவு மற்றும் பானங்கள், விவசாய தயாரிப்புக்கள், பால் உற்பத்திகள், மருந்து பொருட்கள், ஒப்பனை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு உற்பத்திகள்
- சுற்றுச்சூழல் மற்றும் கடல் வாழ் நுண்ணுயிர் விவரக்குறிப்பு
- சுற்றுச்சூழல் மாசுக்களை உடைத்து மாசுக்களை சுத்தம் செய்யும் செயற்பாடு
- கால்நடை பராமரிப்பு
FungiFast பற்றி
இந்த முறை பங்கசுக்கள் வளர்ப்பு முறை மூலம் மேற்கொள்ளப்படும் சோதனை முறை அல்லாததால் பங்கசுக்கள் பற்றிய ஆய்விற்கு உதவுகிறது. பெரும்பாலான பாரம்பரிய முறைகள் பங்கசுக்களின் வெளிவாரியான தோற்றத்தையும் வித்து அமைப்புக்களையும் வைத்தே கண்டறியப்படுகிறது. இவ்வாறான முறைகள் பெரும்பாலும் தவறான இனங்களை அடையாளம் காட்டுவதாகவும் அம்முறைகளை கையாள்வதற்கு நிபுணர்களை நாடுவதாகவும் உள்ளது.
முறையானது முழுமையாக பங்கசுக்களின் DNAயை வரிசைப்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படுவதால் மேற்குறிப்பிட்ட தவறுகள் இடம்பெறுவது தவிர்க்கப்படுகின்றது.
48 மணி நேரத்தில் துல்லியமான, உணர்திறன் மிக்க சோதனை தற்போது உருவாக்கப்பட்டுள்ளதால், பாராமப்ரிய முறைகளில் உள்ள வரையறைகள் நீக்கப்படுகிறது.
FungiFast இன் ஆய்வுகூட அமைப்பு ஒழுங்கு
- DNA பிரித்தெடுப்பு,
- DNA யில் ITS பகுதியினை குறித்து பெருக்கம் செய்தல்,
- DNA யினை தொகுத்து வைத்தல்
- தொகுக்கப்பட்ட DNAயினை Template செய்தல்
- DNAயினை வரிசைப்படுத்தல்
- தரவுகளை ஆய்வு செய்தல்
- அறிக்கை சமர்ப்பித்தல்
முக்கிய தரவுகள்
- FungiFast துல்லியமான தரவுகளை மிக குறுகிய நேரத்தில் பெற்றுத்தருகின்றது.
- உடல்நலக்காப்பிற்கும் தொழில்துறைக்கும் விலைமதிப்பற்ற சேவையினை வழங்குகின்றது
- பாரம்பரிய முறைகளில் இருந்து பல மடங்கு முன்னேற்றம் அடைந்ததாக காணப்படுகின்றது
- விரைவான. செலவு குறைந்த மற்றும் மிக துல்லியமான சோதனை முறையாகும்.
- நோயாளிகளை துரிதமாக தொற்றிலிருந்து மீட்கின்றது.
உங்களுக்கு தெரியுமா?
எமது உடல் பத்தாயிரம் திரில்லியனுக்கு மேற்பட்ட நுண்ணுயிர் செல்களை கொண்டுள்ளது. இது எமது உடலில் உள்ள சாதாரண செல்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். அத்தோடு பெருந்தொகையான நுண்ணுயிர்களை நாம் தினமும் உணவின் மூலமும் சுவாசத்தின் மூலமும் உள்ளெடுக்கின்றோம். இதில் பல நுண்ணுயிர்கள் அதிவீரியமான நோயுண்டாக்கும் நுண்ணுயிர்களாக அமைவதோடு உயிருக்கு ஆபத்தான நோய்களை உண்டாக்கும் காரணிகளாக உள்ளன.